விமானத்தில் அத்துமீறும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் ரூ.15 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சிவசேனா எம்பி ஒருவர் விமானப் பணியாளர் ஒருவரை காலணியால் தாக்கிய சம்பவங்கள் உட்பட பயணிகள் அத்துமீறல் தொடர்பான புகார்கள் வரும் ஏர் இந்தியா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. பயணிகளின் தகராறு செய்வதால் விமானம் காலதாமதமானால் சம்பந்தப்பட்ட பயணிக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ள ஏர் இந்தியா, ஒரு மணிநேரம் காலதாமதம் ஏற்பட்டால் ரூ. 5 லட்சமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் 2 மணி நேரத்திற்குள் காலதாமதம் ஆனால் ரூ. 10 லட்சமும் 2 மணி நேரத்திற்கு மேல் காலதாமதம் ஆனால் 15 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.