கரிபீயன் தீவு நாடான ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1, 941ஆக அதிகரித்துள்ளது.
ஹைதியின் டிபுரோன் தீபகற்ப பகுதியில் சென்ற சனிக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியுள்ள ஏராளமானவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,941ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ,900ஆக அதிகரித்துள்ளது. இதில், பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளின் முன் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே கிரேஸ் புயல் தாக்கத்தால் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.