புவி வெப்பமயமாதலின் விளைவாக கடல்நீர் வெப்பமாதல் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க ஆய்விதழில் வெளியாகியுள்ள அறிக்கையில் 2014-ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் கணித்திருந்ததை விட கடல்நீர் வெப்பமாகும் அளவு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர். புவி வெப்பமயமாதலின் விளைவுதான் இது எனக் கூறியுள்ள அவர்கள் இனியேனும் புவி வெப்பமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
அர்கோ திட்டத்தின் மீது கடலில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ரோபோக்கள் மிதக்கவிடப்பட்டு அவற்றை கொண்டு தொடர்ச்சியாக கடல்நீரில் ஏற்படும் மாற்றங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தத் தரவுகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டில் கடல் நீர் வெப்பமாகும் அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் பனிக்கட்டிகள் உருகி கடல்நீர் மட்டம் அதிகரித்தல், கடலோர பகுதிகளில் நீர் உட்புகுதல் போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடுவதோடு, கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.