கியூபா புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் டியாஸ் பலார் தற்கொலை செய்து கொண்டார்.
ஃபிடெல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் ஃபிடெல் கேஸ்ட்ரோ டியாஸ் பலார். பார்ப்பதற்குத் தந்தையைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்ததால், பிடலிட்டோ அல்லது சின்ன ஃபிடல் என்று ஃபிடெல் காஸ்ட்ரோவின் ஆதரவாளர்கள் அழைத்து வந்தனர். பிடெல் காஸ்ட்ரோவுக்கு 11 குழந்தைகள். அவர்களில் மிகவும் பிரபலமான, அரசுத் துறைகளில் பொறுப்பு வகிக்கும் அளவுக்கு பொதுவெளியில் அறிமுகமானவர் ஃபிடலிட்டோ.
பல மொழிகளைச் சரளமாகப் பேசும் திறன் பெற்ற ஃபிடலிட்டோ, சோவியத் ஒன்றியத்தில் அணு இயற்பியலைக் கற்றுத் தேர்ந்தவர். 1980 முதல் 1992 வரை கியூபாவின் அணு ஆராய்ச்சிக்குத் தலைமை வகித்து வந்தார். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடையாமல் இருந்திருந்தால், கியூபாவை அணுசக்தி நாடாக்கும் அவரது திட்டமும் நிறைவேறியிருக்கக் கூடும். நீண்ட காலமாக மன அழுத்தத்துக்காகச் சிகிச்சை பெற்று வந்த ஃபிடலிட்டோ, தனது தந்தை இறந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக டியாஸ் பலார் மன அழுத்தத்திற்கு சிகிச்சைப் பெற்று வந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டில் இருந்து வெளியாகும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள