”வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்" மக்களை எச்சரித்த தென்கொரிய அரசு

”வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்" மக்களை எச்சரித்த தென்கொரிய அரசு
”வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்" மக்களை எச்சரித்த தென்கொரிய அரசு
Published on

தென் கொரியாவில் தொடர்ந்து  நான்காவது  நாளாக  மூன்று  இலக்க எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு  அதிகரித்த காரணத்தால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறவும், பயணம் மேற்கொள்ளவும் அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கொரோனாத்தொற்று அதிகரித்த காரணத்தால் இன்று தென்கொரியாவில் சிறப்புவிடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் தென்கொரிய தலைநகர பகுதிகளில்  கொரோனாதொற்று மிகவேகமாக அதிகரித்ததால், அந்நாட்டின் சுகாதார அமைச்சர் பார்க் நியூங்-ஹூ  மக்கள் அனைவரும்  வீட்டிலேயே இருக்குமாறும், சியோல் மற்றும் அருகிலுள்ள கியோங்கி மாகாண மக்கள் இரண்டு வாரங்களுக்கு நாட்டின் பிற பகுதிகளுக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். தென்கொரியாவில் நேற்று மட்டும் 279 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர், மே மாதத்திற்கு பிறகு இது மிகப்பெரிய பரவல் எண்ணிக்கையாகும் என அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.

புதிய நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் சியோல் மற்றும் கியோங்கி நகரப்பகுதிகளிலேயே கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. சுகாதார ஊழியர்கள்  நோய்தொற்றுக்கான காரணங்களை கண்டறிய போராடி வருகின்றனர், ஆனால் நோய்ப்பரவலுக்கு தேவாலயங்கள் ஒரு முக்கிய  காரணமாக உருவெடுத்துள்ளன. ஜனாதிபதி மூன் ஜெய்-இன்க்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு  தலைமை தாங்கிய வடக்கு சியோல் தேவாலய ஆயர் தலைமையிலான போராட்டத்தினை  300 க்கும் மேற்பட்டோர்  முன்னெடுத்தனர். அரசின் உத்தரவையும் மீறி சியோல் நகரத்தில் சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்  பேரணியில் கலந்து கொண்டனர். அதனால் சுகாதார ஊழியர்கள் இதுவரை தேவாலயத்தின் 2,000 உறுப்பினர்களை பரிசோதித்துள்ளனர், மேலும் 2,000 பேரை பரிசோதிக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com