போனை ஆனிலேயே வைத்திருக்க வேண்டும்... மல்லையாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்

போனை ஆனிலேயே வைத்திருக்க வேண்டும்... மல்லையாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்
போனை ஆனிலேயே வைத்திருக்க வேண்டும்... மல்லையாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்
Published on

லண்டனில் நேற்று கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையாவுக்கு செல்போனை எப்போதும் புல் ஜார்ஜ்ஜில் ஆனிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

விஜய் மல்லையா கைது செய்யப்பட்ட நிலையில் அவரை இந்தியா கொண்டு வருவது தொடர்பான வழக்கு நேற்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மல்லையாவுக்கு ஜாமீன் வழங்கிய வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம், ஒரு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. மல்லையா இங்கிலாந்தை விட்டு வெளியேறக் கூடாது. வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான அனுமதி கோரும் விண்ணப்பம் எதையும் தாக்கல் செய்யக் கூடாது. பாஸ்போர்ட் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்லத் தேவையான ஆவணங்கள் ஏதையும் அவர் கைவசம் வைத்திருக்கக் கூடாது. 24 மணி நேரமும் செல்போனை புல் பேட்டரி ஜார்ஜ் உடன் ஆனில் வைத்திருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பான வழக்கு மீண்டும் மே 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com