கோவிட் சமயத்தில் டேட்டிங் சென்று லாக்டவுனில் சிக்கிய சீன ஜோடி: கடைசியில் நடந்த சுவாரஸ்யம்!

கோவிட் சமயத்தில் டேட்டிங் சென்று லாக்டவுனில் சிக்கிய சீன ஜோடி: கடைசியில் நடந்த சுவாரஸ்யம்!
கோவிட் சமயத்தில் டேட்டிங் சென்று லாக்டவுனில் சிக்கிய சீன ஜோடி: கடைசியில் நடந்த சுவாரஸ்யம்!
Published on

விசித்திரமான, விநோதமான நிகழ்வுகளுக்கு பஞ்சமில்லாத இடமாகவே மாறி போயிருக்கிறது சமூக வலைதளங்கள். அந்த வகையில் தற்போது, தனது ஆண் தோழரின் வீட்டுக்கு டேட்டிங்காக என்ற பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு மத்திய சீனாவில் உள்ள Zhengzhou பகுதியில் நடந்திருக்கிறது.

31 வயதான வாங் என்ற உப பெயரைக் கொண்ட அந்த பெண் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 6 அன்று Blind date என்ற முறையில் ஆன்லைன் மூலம் பழகிய நபரின் வீட்டுக்கு விருந்துக்காக சென்றிருக்கிறார். அங்கு சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு கிளம்ப எத்தனித்த வாங்கிற்கு வெளியே பெரும் அதிர்ச்சியே கிடைத்திருக்கிறது.

என்னவெனில், கடந்த ஆண்டு ஜனவரி சமயத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்ததால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் டேட்டிங்கிற்கு சென்ற அந்த நபரின் வீட்டிலேயே அடுத்த 10 நாட்களுக்கு தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து இருவரும் ஒரே வீட்டில் 10 நாட்களுக்கு தங்கி இருந்த போது ட்விட்டரை போன்ற சீனாவின் செயலியான Weibo-ல் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பதிவேற்றி நெட்டிசன்களை ஆச்சர்யப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

இதுபோக அந்த பத்து நாட்களில் இருவருக்கும் இடையே நல்ல உறவு மேம்பட்டதை அடுத்துதான் இருவருமே ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. பின்னர் இருவரும் ஒன்றாக சமைத்து உண்டு அளவளாவி வந்திருக்கிறார்கள்.

குவாரன்டைன் நாட்கள் முடிவடைந்து இருவரும் பிரியும் சூழல் ஏற்பட்டபோது வாங்கிற்கு அந்த நபரை விட்டுச் செல்ல மனமே இருக்கவில்லை. இதனால் தொலைதூர உறவான Long distance relationship-ல் இருவரும் இருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ஒன்றாக தங்கி வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த டிசம்பர் 26ம் தேதி அந்த ஜோடி திருமணம் செய்திருக்கிறார்கள். வீட்டிலும் இருவரும் அடிக்கும் லூட்டிகள் நிறைந்த வீடியோக்கள்தான் தற்போது சீனாவின் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது என South China Morning Post செய்தி வெளியிட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com