கொரேனா பரவல் காரணமாக சில விசாக்களை நேர்காணல்கள் இல்லாமல் தரும் வகையில் அமெரிக்க அரசு விதிகளில் தளர்வளித்துள்ளது.
3-வது ஆண்டாக கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் விசா வழங்குவது தொடர்பாக தூதரகங்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதன்படி, தனித்திறன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் H 1B விசா, கல்வி தொடர்பாக வழங்கப்படும் H 3 விசா, நிறுவனங்களுக்கு இடையே பணி மாறுவோருக்கு வழங்கப்படும் 'O' விசா ஆகியவற்றிக்கு நேர்காணல்கள் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல்கள் இல்லாமல் 2022 டிசம்பர் வரை இத்தகைய விசாக்களுக்கு தூதரக அதிகாரிகள் அனுமதி அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.