சீனத் தலைநகரான பெய்ஜிங்கின் வடகிழக்கு ஷுனி மாவட்டத்தின் 10 பகுதிகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு பின்னர் முதன்முறையாக சீன தலைநகரின் பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 18ஆம் தேதி முதல் பெய்ஜிங் நகரத்தில் 16 நோய்த்தொற்றுகள் மற்றும் மூன்று அறிகுறி வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் பெரும்பாலான வழக்குகள் ஷுனியில் இருந்தன. இதனால் கூரியர்கள் குடியிருப்பு வளாகங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் தற்போது ஷூனி மாவட்டத்தில் 10 பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது, இதில் ஆறு கிராமங்கள், மூன்று கட்டிடங்கள் மற்றும் ஒரு தொழில்துறை மண்டலங்களும் அடங்கும் என்று பெய்ஜிங் நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் ஒப்பிடும்போது பெய்ஜிங்கின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் குறைவானவைதான் என்றாலும், நகராட்சி அதிகாரிகள் மூன்று மாவட்டங்களில் வெளிவந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர், அங்கு பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
பெய்ஜிங் அரசாங்கம் கோயில் கண்காட்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்ற பெரிய அளவிலான கூட்டங்களை ரத்து செய்வதாகவும், ஆண்டு இறுதி கொண்டாட்டங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் கூறியது. மேலும், நேரடி இசை நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு புத்தாண்டு தின ஒளி நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டது. தொடக்கப் பள்ளிகள் முதல் சிறப்புவாய்ந்த சிங்குவா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் வரை வெளி நபர்கள் உள் நுழைவதற்கு தடை விதித்துள்ளன.