ஐரோப்பாவில் கொரோனா நோய் பரவல் திடீரென அதிகரித்து வருவதால், பொதுமக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் புதிதாக 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் 73,966 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே போல, பிரிட்டனிலும் புதிதாக 43,676 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பிரான்சில் 32,591 பேருக்கும், இத்தாலியில் 12,448 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.