பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் பங்குகள் தொடர்ந்து சரிவை கண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக உலகின் சந்தை மதிப்புமிக்க டாப் 10 நிறுவனங்களில் ஒன்றாக இருந்த அந்நிறுவனம் 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சந்தை மதிப்பில் சுமார் 565 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிறுவனம் தற்போது கொண்டுள்ளது. முன்னர் மெட்டா நிறுவனம் உலக அளவில் ஆறாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் டாப் 10 நிறுவனங்கள்!
>ஆப்பிள் - சந்தை மதிப்பு 2.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்
>மைக்ரோசாஃப்ட் - சந்தை மதிப்பு 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்
>Aramco - சந்தை மதிப்பு 2.0 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்
>ஆல்பாபெட் - சந்தை மதிப்பு 1.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்
>அமேசான் - சந்தை மதிப்பு 1.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்
>டெஸ்லா - சந்தை மதிப்பு 905.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
>Bershire Hathaway - சந்தை மதிப்பு 700.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
>Nvidia - சந்தை மதிப்பு 613.0 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
>TSMC - சந்தை மதிப்பு 600.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
>டென்சென்ட் - சந்தை மதிப்பு 589.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
Source: Bloombergquint