கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணை ஒன்றை வடகொரியா ஏவியதாக ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் தெரிவித்துள்ளன.
பியாங்யாங்கிற்கு வடக்கே உள்ள சுனான் மாவட்டத்திலிருந்து வடகொரியா ஏவிய ஏவுகணை சுமார் 66 நிமிடம் பயணித்து ஜப்பான் கடலில் விழுந்ததாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து பல்வேறு போர் பயிற்சிகளை மேற்கவுள்ளதாக தென்கொரியா அறிவித்திருந்ததற்கு பதிலடியாக இந்த ஏவுகணையை வடகொரியா ஏவியதாகத் தெரிகிறது.
அமெரிக்கா தென்கொரியா இடையே எந்தப் போர் பயிற்சி நடைபெற்றாலும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா தெரிவித்திருந்தது. அண்மையில்தான் தனது படை பலத்தை வடகொரியா பேரணியாக நடத்திக் காட்டியிருந்தது.