3 நாளில் ஏற்பட்ட மாற்றம் - துரிதமாக கட்டப்பட்ட சீன மருத்துவமனையின் போட்டோ!

3 நாளில் ஏற்பட்ட மாற்றம் - துரிதமாக கட்டப்பட்ட சீன மருத்துவமனையின் போட்டோ!
3 நாளில் ஏற்பட்ட மாற்றம் - துரிதமாக கட்டப்பட்ட சீன மருத்துவமனையின் போட்டோ!
Published on

சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பல நாடுகளில் பெரிய அச்சம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை சீனாவில் 250 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே சீனாவில் இருந்து தாயகம் திரும்பும் பிறநாட்டு பயணிகள் அனைவரும் உச்சகட்ட உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு மருத்துவமனை ஒன்றை துரிதமாக கட்டியுள்ளது. சீன ஊடகம் வெளியிட்ட செய்தியின்படி, 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை சீனா கட்டி முடித்துள்ளது. ஜனவரி 25ம் தேதி மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.துரிதமாக கட்டி முடிக்கப்பட வேண்டுமென்பதற்காக இரவு பகலாக பணிகள் நடைபெற்றன.

7 நாட்களில் இந்த மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டிமுடித்துள்ள நிலையில், நாளை முதல் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 1400 ராணுவ மருத்துவ அதிகாரிகளை அனுப்ப சீன அரசு அனுமதி அளித்துள்ளது. கட்டடம் கட்டப்பட்டது தொடர்பான ஒரு ஜிஃப் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜனவரி 29,30,31 ஆகிய 3 நாட்களில் கட்டடம் கட்டப்பட்ட இடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தை அந்த வீடியோ விளக்குகிறது. அந்த வீடியோவில் காட்டுப்பகுதியாக இருந்த அப்பகுதி 3 நாட்களில் கட்டடப் பகுதியாக உருவெடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com