மியான்மரில் ஆங் சான் சூ கி தலைமையிலான கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து கலைத்து விட அந்நாட்டு தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஜனநாயகத்துக்கான தேசிய அணி கட்சி, கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் கூடுதல் இடங்களுடன் வெற்றி பெற்றது.
பிப்ரவரியில் ஆட்சி அமைக்க இருந்த நிலையில், தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகக் கூறி ஆன் சாங் சூச்சியின் கட்சி ஆட்சி அமைக்கவிடாமல் ராணுவம் அதிகாரத்தைத் பிடித்தது.
ஆன் சாங் சூச்சி உள்பட அவரது கட்சியினர் கைது செய்யப்பட்டு பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும் நிலையில், அவரது கட்சியை கலைத்துவிட பரிசீலிப்பதாக ராணுவம் நியமித்த தேர்தல் ஆணையத்தின் தலைவர் தெய்ன் சோ தெரிவித்துள்ளார்.