சந்திரனுக்கு சென்ற அமெரிக்க விண்வெளி வீரர் எட்வின் பஸ் ஆல்ட்ரின் (Edwin Buzz Aldrin) அணிந்திருந்த ஜாக்கெட் 21 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
நிலவில் முதன் முதலில் இறங்கி நடந்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என தெரியும் . அவருடன் பயணம் செய்து நிலவில் இரண்டாவதாக கால் பதித்தவர்தான் பஸ் ஆல்ட்ரின். தற்போது 92 வயதாகும் இவர், தனது விண்வெளி பயணத்தின்போது பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டுள்ளார். அதில், இவர் அணிந்திருந்த ஜாக்கெட் இந்திய ரூபாயின் மதிப்பில் 21 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த பரிசீலனைக்கு பிறகு, இந்த பொருட்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான நேரம் வந்துள்ளதாக, எட்வின் பஸ் ஆல்ட்ரின் கூறியுள்ளார்.
உண்மையிலேயே நிலவில் முதலில் இறங்கியிருக்க வேண்டியது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல! எட்வின் பஸ் ஆல்ட்ரின் தான்! ஏன் அவர் இறங்கவில்லை? முழுமையாக தெரிந்துகொள்ள இந்த லிங்கை சொடுக்கவும்: நிலவில் முதலில் காலடி வைக்க எட்வின் பஸ் ஆல்ட்ரின் மறுத்தாரா? நூலிழையில் மாறிப்போனதா வரலாறு!?