பொலிவியா நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் ஈவோ மொராலஸ் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகக்கூறி ஈவோ மொராலஸிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து மொராலஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் நடைபெற்ற தேர்தலில் ஈவோ மொராலஸி-ன் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. 33 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான கட்சி எனக்கூறி, எதிர்கட்சியைச் சேர்ந்த ஹென்ரி ரோமேரியோ நாடாளுமன்றத்தில் வாக்குவாதம் நடத்தினார்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.