இலங்கை - சீன உறவில் எந்த மூன்றாவது நாடு தலையிடக்கூடாது என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறியுள்ளார்.
இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், இரு நாடுகளிடையிலான நட்பு இலங்கை- சீனா இரண்டு நாடுகளின் வளர்ச்சிக்கும் உதவுவதாக அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் போது கூறினார். இலங்கை- சீன உறவு வேறு மூன்றாம் நாடுகளை குறிவைக்கவில்லை என்றும் இரு நாடு உறவுகளில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என்றும் இந்தியாவை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசினார்.
இலங்கை அம்பன்தோட்ட துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்தது, கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயல்படுத்துவது போன்றவை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களாக பார்க்கப்படும் நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து வெளியாகியிருக்கிறது.