வயிற்றுக்குள் சிக்கிய 100 மீன் முட்கள்!

வயிற்றுக்குள் சிக்கிய 100 மீன் முட்கள்!
வயிற்றுக்குள் சிக்கிய 100 மீன் முட்கள்!
Published on

வயிற்றுக்குள் சிக்கிய ஊசி போன்ற 100 மீன் முட்களை ஆபரேஷன் மூலம் அகற்றியுள்ளனர் சீனாவைச் சேர்ந்த டாக்டர்கள்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஷோவ். வயது 63. மீன் பிரியர். ஏகப்பட்ட சிறு மீன்களைப் போட்டு சூப் வைத்துக் குடித்தார். மீன் முட்கள் வயிற்றில் இருந்து தானாக வெளியேறிவிடும் என நினைத்தார். நினைத்ததெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன? 

மறுநாள் காலையில் தொண்டையில் சின்னதாக வலி. மீன் முள்தான் என்று புரிந்தது. ’தன்னால சரியாயிரும்’ என்று நினைத்துக்கொண்டு அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டார். பிறகு சில நாட்கள் கழித்து வயிற்றின் அடிப்பகுதியில் வலி அதிகரிக்க, சிகிச்சைக்காக சிச்சுவான் மாகாண மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். டாக்டர்கள், ஸ்கேன் எடுத்துப் பார்த்தனர். அதிர்ச்சி. அவரது மலக்குடலில் ஒன்று இரண்டல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட முட்கள். இரண்டு மணி நேரம் போராடி, ஊசி போன்ற அந்த மீன் முட்களை எடுத்துள்ளனர் டாக்டர்கள்.

‘அதிகமான மீன் முட்கள் காரணமாக அவரது மலக்குடல் பயங்கரமாக வீங்கிவிட்டது. ஒரே நேரத்தில் அனைத்தையும் எடுக்க முடியாது என்பதால் வீட்டுக்கு அனுப்பி கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு வரச் சொன்னோம். அந்த நாட்களில் பாதியாவது வெளியேறியிருக்கும் என நினைத்தோம்’ என்றார் டாக்டர் ஹுவாங் ஜியின். இது வழக்கத்துக்கு மாறான கேஸ் என்கிறார்கள் அங்குள்ள மற்ற டாக்டர்கள்.

ஷோவ், இப்போது நலம். இனி மீன் வாசம் வந்தால் கூட அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கமாட்டார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com