எல்லையில் சீனா கட்டிய பாலம்! வாகனங்கள் செல்வதை படம்பிடித்த செயற்கைக்கோள்.. இந்தியாவுக்கு சிக்கல்?

இந்திய - சீன எல்லைப் பகுதியில் உள்ள பாங்காங் நதியின் குறுக்கே 400 மீட்டர் பாலத்தை சீனா கட்டி முடித்திருந்த நிலையில், தற்போது அந்தப் பாலம் செயல்பாட்டில் உள்ளது என்பதை செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
செயற்கைக்கோள்
செயற்கைக்கோள்எக்ஸ் தளம்
Published on

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நெடுங்காலமாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2021இல் அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 101 வீடுகளைக் கொண்ட ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்து கடந்த ஆண்டு, சீனா புதிய வரைபடம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அந்த வரைபடத்தில், ஆக்கிரமிப்பில் வைத்திருக்கும் இந்தியப் பகுதிகளை ’அக்‌ஷயா சின்’ எனக் குறிப்பிட்டிருந்தது.

அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, 'தெற்கு திபெத்’ எனவும் குறிப்பிட்டிருந்தது. இந்திய நிலப் பகுதிகளை மட்டுமல்ல, பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளையும்கூட சீனா தம்முடைய பிரதேசம் என இந்த வரைபடத்தில் உரிமைகோரி இருந்தது. இது, உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், நடப்பாண்டில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழிப்பெயர்களை சீன அரசு சூட்டியிருந்தது பேசுபொருளானது. தவிர, இந்திய எல்லைப் பகுதிகளில் சுரங்கங்கள், ஹெலிபேடுகள், பாலங்கள் மற்றும் பதுங்குக் குழிகளை அதிகளவில் உருவாக்கி வருகிறது. மேலும், இப்பகுதியில் கூடுதல் போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் உளவு விமானங்களையும் சீனா நிறுத்தி வேவு பார்த்து வருகிறது.

இதையும் படிக்க: நீட் தேர்வில் 705 மார்க்.. ஆனால், +2வில் Fail.. துணைத்தேர்விலும் தோற்று சர்ச்சையில் சிக்கிய மாணவி!

செயற்கைக்கோள்
30 இடங்களுக்கு சீன மொழிப் பெயர்கள்.. அருணாச்சல பிரதேசத்தில் சீனா அட்டகாசம்.. பின்னணி என்ன?

இந்த நிலையில், லடாக்கில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் நதியின் [Pangong Lake] குறுக்கே 400 மீட்டர் பாலத்தை சீனா கட்டி முடித்திருந்தது. இப்பாலம் கட்டப்பட்டது முதல் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அந்தப் பாலம் செயல்பாட்டில் உள்ளது என்பதை செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. சீன துருப்புகள் பாங்காங் நதியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளுக்கு எளிதாகச் சென்று வர உதவும் வகையில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாலம் கட்டப்பட்டுள்ள பகுதியானது, கடந்த 1958 முதல் சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்துவருகிறது. தற்போது கட்டப்பட்டுள்ள இந்த பாலமானது, நதியைக் கடக்க 50 - 100 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வேண்டிய நேரத்தைக் குறைத்து எளிதாக ராணுவத் துருப்புகள் சென்று வருவதற்கு வழிவகை செய்கிறது. இந்திய எல்லையில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைத்துள்ளது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சீனா பாலம் கட்டியிருக்கும் விவகாரத்தில் மத்திய அரசு அமைதியாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிக்க: “ரூ.1200 கோடி கட்டடத்தை பாதுகாக்க ரூ.120 பக்கெட்”- ஒழுகிய மழைநீர்.. விமர்சனத்தில் புதிய நாடாளுமன்றம்

செயற்கைக்கோள்
அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பெயரை மாற்றிய சீனா.. இந்த முறை 11 இடங்களுக்கு! இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com