காற்று மாசுப்பாட்டை தவிர்க்க ஊருக்குள் வந்த காடு

காற்று மாசுப்பாட்டை தவிர்க்க ஊருக்குள் வந்த காடு
காற்று மாசுப்பாட்டை தவிர்க்க ஊருக்குள் வந்த காடு
Published on

காற்று மாசுபாட்டைத் தவிர்க்க வனநகரம் ஒன்றை வடிவமைத்துள்ளது சீனா. உலகின் முதல் வன நகரமான இந்த நகரம் தெற்கு லியுஸோ பகுதியில் வடிமைக்கப்பட்டு வருகிறது.

லியுஸோ நகரத்தில் அமைந்துள்ள அனைத்து கட்டடங்களின் முகப்பு பக்கங்களிலும் மரங்கள் மற்றும் செடிகளை வளர்த்துள்ளனர். இந்த நகரில் உள்ள அலுவலகங்கள், வீடுகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், பள்ளிகள் என அனைத்து கட்டிடங்களும் மரங்கள், செடிகளால் நிறைந்துள்ளது. இது வெறும் அழகுக்காக வளர்ப்பவை என நாம் கருதலாம் ஆனால் இதற்கு பின்னால் ஒரு பெரிய அறிவியல் காரணத்தை கூறுகின்றனர். 

அதாவது, கட்டடங்களில் வளர்க்கப்படும் மரங்கள் ஆண்டுதோறும் சுமார் 10,000 டன் கார்பன் டை ஆக்சைட் வாயுவை உறிஞ்சி 900 டன்கள் ஆக்ஸிஜன் வாயுவை உருவாக்குமாம். மொத்தமாக சேர்த்து இந்த நகரில் 40,000 மரங்கள் உள்ளன. மேலும் 100 வகைகளைச் சேர்ந்த ஒரு மில்லியன் செடிகள் கட்டடங்களில் நடப்பட உள்ளது. இதனால் நகரத்தில் ஏற்படும் காற்று மாசுபாடு குறைக்கப்படும் என்கின்றனர் சுற்றுசூழல் ஆய்வாளர்கள். 

வெறும் மரத்தை மட்டும் வளர்த்து விட்டால் காற்று மாசுபாடு குறைந்துவிடுமா என கேட்கலாம். எனவே  போக்குவரத்திற்காக ரயில்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்களே இந்த வனநகரத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. 2020ம் ஆண்டிற்குள் லியுஸோ முழு வனநகரமாக ஜொலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தத் தாவரங்கள் சார்ந்த கட்டடங்களை ஸ்டெஃபெனோ போரி ஆர்கிடெட்டி என்ற நிறுவனம் வடிவமைத்து வருகிறது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com