வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சைக்குச் செய்து கொண்டதாகவும், அதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக செய்தி வெளியாகியது. அந்தச் செய்தியில் புகைப் பிடித்தல், உடல் பருமன், அதிக வேலைப்பளு காரணமாக இதய நோயால் கிம் ஜாங் உன் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது. வடகொரியா தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.