ஆப்பிள் போனில் புத்தாண்டு வாழ்த்து அ‌னு‌ப்பியதற்கு சம்பளம் ‘கட்’

ஆப்பிள் போனில் புத்தாண்டு வாழ்த்து அ‌னு‌ப்பியதற்கு சம்பளம் ‘கட்’
ஆப்பிள் போனில் புத்தாண்டு வாழ்த்து அ‌னு‌ப்பியதற்கு சம்பளம் ‘கட்’
Published on

ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன் மூல‌ம் புத்தாண்டு வாழ்த்து அ‌னு‌ப்பியதற்காக ஊ‌ழி‌யர்கள் இருவருக்கு சம்பளக் குறைப்புடன் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 

சீனாவின் ஹுவெய் (Huawei) நிறுவனமும் அமெரிக்காவின்‌ ஆப்பிள் நிறுவனமும் உலளகவில் பெரும் தொழிற் போட்டியாளர்களாக ‌உள்ளன. உலகில் ஸ்மார்ட் போன்‌களை அதிகம் விற்கும் 2வது பெரிய நிறுவனமாக இருந்த ஆப்பிளை பின்னுக்கு தள்ளி ஹுவெய் அந்த இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கடந்த புத்தாண்டுக்கு ஹுவெய்  நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது ஐ போனில் இருந்து அனுப்பப்பட்டதால் அந்த அடையாளத்துடன் ட்விட்டரில் பகிரப்பட்டது. 

இதனைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக அந்த ட்விட்டை அழித்துவிட்டனர். ஆனால் அந்த ஸ்கிரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஒரு செல்போன் நிறுவனமே தனது போட்டி நிறுவனத்தின் செல்போனைத்தான் பயன்படுத்துகிறது என்ற கிண்டலுக்கும் ஆளானது. 

இதற்கு விளக்கம் அளித்துள்ள ஹுவெய் நிறுவனம், சீனாவில் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டு இருப்பதால், விபிஎன் முறை [virtual private network (VPN)] மூலமாகவே வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்தே சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஏற்பட்ட குளறுபடியே இதற்கு காரணம் என்று கூறியுள்ளது. 

ஆனாலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு ஊழியர் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு 5 ஆயிரம் யுவான் சம்பளக்‌குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மற்றொருவருக்கு சம்பளம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் அடு‌த்த ஓராண்டில் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com