20 போர் விமானங்கள்.. 8 போர்க்கப்பல்கள்.. எல்லையில் நுழைந்த சீன ராணுவம்.. தைவான் குற்றச்சாட்டு!

சீனா விமானப் படையின் 20 போர் விமானங்கள் மற்றும் 8 போர்க்கப்பல்கள் தைவான் எல்லைக்குள் இன்று அத்துமீறி நுழைந்ததாக தைவான் பாதுகாப்புத் துறை வரைபடங்களுடன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
சீனா, தைவான்
சீனா, தைவான்எக்ஸ் தளம்
Published on

சீன கடல் பகுதி அமைந்துள்ள ஒரு சிறு தீவே, தைவான். ஆனால், தைவானை தனி நாடு அல்ல என்றும், அது சீனாவின் ஒரு பகுதி என்றும் தொடர்ந்து சீனா சொல்லிவருகிறது. இதற்கு தைவான் அரசு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தைவான் அதிபர் லாய் சிங் தேவ்-ஐ பிரிவினைவாதி என்றும், தைவான் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சீனா தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்துவருகிறது. தவிர, தைவானை அச்சுறுத்தும் விதமாக போர்ப் பயிற்சியிலும் சீனா ஈடுபடுவது வழக்கமாக உள்ளது.

இதனால், பல ஆண்டுகளாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே முட்டல் மோதல் நிலவி வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு முப்படைகளை வைத்து, தைவானை கைப்பற்றுவது போன்று சீனா போர் ஒத்திகை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, தைவானின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு இடையூறு தரும்விதமாக, தைவான் எல்லையில், சீன விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டது.

இதையும் படிக்க: செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு | எலான் மஸ்க் - முகேஷ் அம்பானி மோதல்.. மத்திய அரசு அதிரடி முடிவு!

சீனா, தைவான்
வான்வழி அத்துமீறலில் சீனா... 'தயாராகும்' தைவான்... - தொடரும் பதற்றமும் பின்னணியும்

அப்போது தைவானை அச்சுறுத்தும்விதமாக 125 போர் விமானங்களையும், போர்க்கப்பல்களையும், சீனாவின் மிகப் பெரிய விமானம்தாங்கி கப்பலான லியோனிங்கையும் எல்லையில் நிறுத்தி சீனா பயிற்சி மேற்கொண்டது. இந்த பயிற்சியின்போது, அடிக்கடி தைவான் எல்லைக்குள் சீனப் படையினர் வந்துசென்றதாகவும், தைவான் மீது 2 ஏவுகணைகளை ஏவியதாகவும் குற்றம்சாட்டியுள்ள தைவான், விரைவில் சீனா உண்மையான தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், சீனா விமானப் படையின் 20 போர் விமானங்கள் மற்றும் 8 போர்க்கப்பல்கள் தைவான் எல்லைக்குள் இன்று (அக்.17) காலை 6 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) அத்துமீறி நுழைந்ததாக தைவான் பாதுகாப்புத் துறை வரைபடங்களுடன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மேலும், தாங்கள் சூழலை கண்காணித்து வருவதாகவும், சூழலுக்கு ஏற்ப செயல்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 24 மில்லியன் மக்களைக் கொண்ட ஜனநாயக நாடான தைவானைச் சுற்றி சீனாவின் இராணுவப் பயிற்சிகள் சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: எகிப்து|கிரேட் பிரமிடு உச்சியில் இருந்த நாய்; பாராகிளைடிங்கில் பறந்த நபர் படம்பிடித்த ’வாவ்’ காட்சி!

சீனா, தைவான்
’ராணுவத்தை பயன்படுத்தமாட்டோம் என்று சொல்ல முடியாது’..தைவான் குறித்து சீன அதிபர் எச்சரிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com