விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்புப் பெட்டி தேடும் பணி தீவிரம்

விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்புப் பெட்டி தேடும் பணி தீவிரம்
விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்புப் பெட்டி தேடும் பணி தீவிரம்
Published on

சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சீனாவின் குன்மிங் நகரில் இருந்து குவாங்ஜோ நகருக்கு கடந்த திங்கள்கிழமை புறப்பட்ட 'போயிங் 737' விமானம், ஹுஜோ நகரத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. மேலும், விமானம் விழுந்ததால் அந்த மலைப்பகுதியில் பயங்கர தீ ஏற்பட்டது.

123 பயணிகள், 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 132 பேர் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக விமானத்தில் உள்ள கருப்புப் பெட்டிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. எனினும், விபத்துக்குள்ளான பகுதியில் தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பணியில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், ஹெலிகாப்டர்கள் மூலமாக தீ அணைக்கப்பட்டதை அடுத்து மீண்டும் தேடுதல் பணி நடைபெற்றது. இதில் ஒரு கருப்புப் பெட்டி கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது கருப்பு பெட்டியை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து நடத்த இடத்தில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, கருப்புப் பெட்டியை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com