திபெத்தில் ஹெலிகாப்டர் டூரிசத்துக்கு சீனா அனுமதி அளித்துள்ளது.
சீனாவில் தன்னாட்சி பகுதி திபெத். இந்தப் பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த வருடம் மட்டும் 23 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்நிலையில் இங்குச் சுற்றுலாவை மேம்படுத்த முடிவு செய்துள்ளது சீனா. அதன் ஒரு பகுதியாக ஹெலிகாப்டரில் சென்று வான்வழி திபெத்தைப் பார்ப்பதற்கு சீனா தடை விதித்திருந்தது.
இப்போது அதற்கு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து செக்கோலிங்க் விமான நிலையத்தில் இதற்காக முன்பதிவு செய்யலாம் என்றும், லாஷா (lhasa)பகுதியை சேர்ந்த நிறுவனம் சிறிய ரக விமானங்களை இரண்டு வழிகளில் இயக்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.