‘ஓ மை கடவுளே’ பாணியில் விவாகரத்து வழக்கு | மனைவியை தோளில் தூக்கிக்கொண்டு ஓடிய கணவன்! என்ன நடந்தது?

20 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த தனது மனைவி விவாகரத்து கோரிய நிலையில், அவரை பிரிய மனமில்லாத கணவர், மனைவியை தோளின் மேல் தூக்கிக்கொண்டு நீதிமன்றத்திலிருந்து தப்பி ஒடிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
ஓ மை கடவுளே பாணியில் விவாகரத்து வழக்கு
ஓ மை கடவுளே பாணியில் விவாகரத்து வழக்குபுதிய தலைமுறை
Published on

20 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த தனது மனைவி விவாகரத்து கோரிய நிலையில், அவரை பிரிய மனமில்லாத கணவர், மனைவியை தோளின் மேல் தூக்கிக்கொண்டு நீதிமன்றத்திலிருந்து தப்பி ஒடிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

சீனாவில் 20 வருடங்களுக்கும் மேலாக திருமண வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர் லீ மற்றும் சென் என்ற தம்பதியினர். அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டனை ஏற்பட்டுள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத மனைவியான சென், ஒரு நாள் விவகரத்துக்கு கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

ஓ மை கடவுளே பாணியில் விவாகரத்து வழக்கு
ஓ மை கடவுளே பாணியில் விவாகரத்து வழக்கு

அந்த மனுவில் கணவர் தன்னிடம் சண்டைபோட்டுக்கொண்டே இருப்பதாகவும், கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்து தங்களுக்கு விரைவில் விவாகரத்து வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, “கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழ சம்பந்தம் உள்ளதா?” என்று கேட்டுள்ளனர்.

இதற்கு கணவன் விவாகரத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவிக்கவே, மனைவி விவாகரத்து வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஓ மை கடவுளே பாணியில் விவாகரத்து வழக்கு
உ.பி:கட்டணம் செலுத்தாததால் கொளுத்தும் வெயிலில் உட்கார வைக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்

விசாரணையின் ஒரு கட்டத்தில், மனைவி தன்னை விட்டு பிரிந்துவிடுவார் என்று உணர்ந்த கணவர், அலேக்காக மனைவியை தோளில் தூக்கிவிட்டு, நீதிமன்றத்திலிருந்து ஒரே ஓட்டமாக ஓடியுள்ளார். இதனால் சென் அலறவே, அதனை கண்ட அதிகாரிகாரிகள் லீ-யை பிடித்துள்ளனர்.

இதனை கண்ட நீதிபதி, இன்னும் ஒரேயொரு வாய்ப்பு உங்களுக்கு தருகிறேன் லீ எனக்கூறி, “இனி மேல் இவ்வாறு செய்யக்கூடாது” என்ற எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மன்னிப்பு கடிதம் ஒன்றினை எழுதி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இது குறித்து கடிதமெழுதிய லீ, எனது தவறின் தீவிரத்தையும் அதன் எதிர்மறையான தாக்கத்தையும் இப்போது உணர்கிறேன். எதிர்காலத்தில் இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கணவன் - மனைவி இடையே இன்னும் பிணைப்பு உள்ளது என்று கூறிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் ‘ஓ மை கடவுளே’ படத்தின் க்ளைமேக்ஸில் இப்படியொரு காட்சி வருமென்பதால், நம்ம ஆடியன்ஸூக்கு இது பழக்கப்பட்ட சுவாரஸ்ய காட்சிதான்! அங்கே விஜய் சேதுபதி, அசோக் செல்வனுக்கு வாய்ப்பு கொடுப்பார்... இங்கே நீதிபதி கொடுத்திருக்கிறார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com