சீனா | கட்டணம் செலுத்தி அன்பை பெற்றுக் கொள்ளலாம்... வைரலாகும் அடுத்த ட்ரெண்ட்!

சீனாவில் உள்ள தெரு ஒன்றில் இளம் பெண் ஒருவர், அன்புக்கு விலை போட்டு விற்று கொண்டிருக்கிறார். யார் அவர்? என்ன நடந்தது? பார்க்கலாம்...
சீனா
சீனாமுகநூல்
Published on

சீனாவில் சமூக வலைதளங்களில், பல புதுப்புது நிகழ்வுகளை நாம் அன்றாடம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். அந்தவகையில், ‘hug’ or ‘slap’ என்றெல்லாம் பலர் தங்களின் கைகளில் பலகைகளை வைத்துக் கொண்டு தெருக்களின் ஓரங்களில் நிற்பதை காண்டிருப்போம். இதுபோன்ற காட்சிகள் வெளிநாடுகளில்தான் பெரும்பாலும் அரங்கேறுகிறது.

இந்நிலையில் சீனாவில் சமீபத்தில் ட்ரெண்டாகி உள்ளது மற்றொரு வீடியோ. அதில் வரும் இளம்பெண்ணின் செயல் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம் அது சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவின்படி சீனாவின் நகர வீதி ஒன்றில், ஸ்டால் ஒன்றை அமைத்து அதில் ஒரு அட்டையில் காதலையும் மற்றொரு அட்டையில் தோழமையையும் விலை போட்டு விற்று வருகிறார் ஒரு பெண்.

அதில்,

  • கட்டியணைப்பதற்கு 11 ரூபாயும்,

  • ஒரு முத்ததிற்கு 115 ரூபாயும்,

  • ஒன்றாக படம் பார்க்க வேண்டுமானால் 150 ருபாயும்,

  • வீட்டு வேலைகளை செய்துதர 200 ரூபாயும்,

  • ஒன்றாக மது அருந்த 4100 ரூபாயும் கட்டணம்

என்று எழுதப்பட்டுள்ளது. சீனாவில் ஷென்சென் போன்ற இடங்களில் பல பெண்கள் இத்தகைய ஸ்டால்களை அமைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சூழலில், நெட்டிசன்கள் தங்களின் எதிர் கருத்துக்களை அதில் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக “மனித உணர்ச்சிகளை இப்படி வியாபாரம் செய்தால், அது உறவுகள் மீதான நம்பிக்கையின்மைக்கு வழிவகுக்கும்” என்கின்றனர் பலரும்.

சீனா
இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்.. ஹமாஸ் இயக்கத் தலைவர் உயிரிழப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com