300 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நதியினல் மூழ்கிய 10,000 க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டுள்ளதாக சீன தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பொருட்களில் பெரும் அளவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தால் ஆன நாணயங்கள், வாள்கள், கத்திகள், ஈட்டிகள் மற்றும் இரும்பு ஆயுதங்கள் இருப்பதாக சிச்சுவான் மாகாண தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் காவோ டாலுன் கூறியுள்ளார்.
தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களில் உள்ள செதுக்கப்பட்ட எழுத்துக்கள் இன்னும் தெளிவான இருப்பதாகவும் நகைகள் அந்த கால அழகிய கலையை காண்பிப்பதாகவும் அரசு செய்தி நிறுவனமான ‘சின்குவா’ தெரிவித்துள்ளது.
இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்ட தளம் மிஜியாங் நதியும் அதன் கிளையான ஜிஞ்சியான் நதியும் இனையும் இடத்தில் உள்ளது. அதாவது சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் இருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1646-ம் ஆண்டில், ஜியான்ஜோங் என்ற விவசாயிகள் தலைவர் மிங் வம்சவளியனரால் தோற்கடிக்கப்பட்டர். அப்போது அவரது செல்வங்களை படைவீரர்கள் இந்த நதியின் வழியாக 1000 படகுகளில் எடுத்து சென்றபோது அந்த படகு மூழ்கியதாக நம்பப்படுகிறது.
இதைக் கண்டுப்பிடிக்க ஆராய்ச்சியாளர்கள் வறண்ட காலத்தில் நதியில் உள்ள கொஞ்சம் தண்ணீரை வெளியேற்றி தோண்ட தொடங்கினர். அப்போது இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டது.