1000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை 6 நாட்களில் கட்ட திட்டம்: சீன அரசு தீவிரம்!

1000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை 6 நாட்களில் கட்ட திட்டம்: சீன அரசு தீவிரம்!
1000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை 6 நாட்களில் கட்ட திட்டம்: சீன அரசு தீவிரம்!
Published on

சீனாவில் கொரனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க , வுஹான் நகருக்கான போக்குவரத்தை சீன அரசு துண்டித்தது. தற்போது மேலும் 9 நகரங்களுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முதலில் வுஹான் நகரில் இருந்து இந்த வைரஸ் பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஹுபே, குவாங்கங், செஜியாங், குவாங்டாங், ஜியாங்சி ஆகிய மாகாணங்களுக்கு இந்த வைரஸ் பரவியது. மேலும் ஷாங்காய், பெய்ஜிங், தியான்ஜின், சோங்கிங் ஆகிய நகரங்களுக்கும் கொரனா வைரஸ் பரவி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 3 கோடி பேர் வெளி உலகுடனான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு மருத்துவமனை ஒன்றை துரிதமாக கட்டி வருகிறது. சீன ஊடகம் வெளியிட்ட செய்தியின்படி, 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை சீனா வேகமாக கட்டி வருகிறது. 6 நாட்களில் இந்த மருத்துவமனையைக் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 3ம் தேதி மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இரவு பகலாக பணி நடந்து வருகிறது.

Prefabricated Building என்ற முறையில் இந்த மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாளுக்கு நாள் வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையை துரிதமாக கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com