இலங்கையில் மூன்று தீவுகளில் மேற்கொள்ளப்பட இருந்த மின்திட்டங்களை சீனா கைவிட்டுள்ளது. ஆயினும் அதனை இந்தியாவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு வழங்க தீர்மானிக்கவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.
இலங்கையின் நெடுந்தீவு, அனலைத்தீவில் மேற்கொள்ள இருந்த மின்திட்டங்களை கைவிடுவதாக கடந்த 2ஆம்தேதி சீனா அறிவித்தது. பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாகவும் சீனா கூறியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரவை செய்தித்தொடர்பாளர், தரமற்ற உரம் விவகாரத்தால் இலங்கை-சீனா இடையேயான உறவில் எந்த விரிசலும் இல்லை என்றார்.
சீனா கைவிட்ட மின்திட்டங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு தர எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இலங்கை கூறியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் மின்திட்டங்களை கைவிட்டுள்ள சீனா, மாலத்தீவில், சூரிய மின்சக்தி திட்டங்களை முன்னெடுக்க கடந்த நவம்பர் 29-ஆம் தேதி கையெழுத்திட்டுள்ளது.