சீனாவில் முட்டைகளின் கூட்டில் இருக்கும் கருக்களுடன், 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் அரியவகை புதைபடிவம் கண்டறியப்பட்டது.
கிழக்கு சீனாவின் கன்ஷோ நகரில் புதைபடிவத்தை தோண்டியபோது, உள்ளே பாதுகாக்கப்பட்ட கருக்கள் கொண்ட முட்டைகளின் கூட்டில் அமர்ந்திருக்கும் டைனோசரின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.
கன்ஷோ நகரின் ரயில் நிலையம் அருகே தோண்டப்பட்டபோது, 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 24 முட்டைகள் கொண்ட ஒரு கிளட்சில் வயதுவந்த ஓவிராப்டோரோசர் அடைகாக்கும் பகுதியைக் கொண்டுள்ளது. இவற்றில் ஏழு பாதிக்கப்படாத கரு மற்றும் டைனோசர்களின் எலும்பு எச்சங்கள் உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும் நவீன பறவைகளைப் போல ஓவிராப்டோரோசர் அவற்றின் முட்டைகளை அடைத்து வைத்திருப்பதையும் இந்த கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகிறது.
பறவைகள் போன்ற தெரோபாட் டைனோசர்களின் குழுவான ஓவிராப்டோரோசரின் எச்சங்கள் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என நிபுணர்கள் தெரிவித்தனர். "இந்த வகையான கண்டுபிடிப்பு ... டைனோசர்களில் மிகவும் அரிதானது" என்று கார்னகி இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் மத்தேயு லாமன்னா கூறினார்.