மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான ஐவரி கோஸ்ட் மற்றும் கானாவில் உள்ள கொக்கோ விவசாயப் பண்ணைகளில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட கவலைப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இங்குள்ள மார்ஸ், ஹெர்சே, நெஸ்லே மற்றும் கார்கில் போன்ற பிரபல பண்ணைகள் அவர்களின் எண்ணிக்கையை 70 சதவீதம் அளவுக்குக் குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளன.
சில ஆண்டுகளாக கானா, ஐவரி கோஸ்ட் நாடுகளில் உள்ள கொக்கோ பண்ணைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர். ஏற்கெனவே அதன் எண்ணிக்கையை குறைப்பதாகச் சொல்லியும் நிறுவனங்கள் அதைச் செய்யவில்லை.
அமெரிக்க நிதியுதவியுடன் செய்யப்பட்ட ஆய்வின்படி, உலகின் மிகப்பெரிய இரு கொக்கோ நிறுவனங்கள் மிகக் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட ஆபத்தான வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதாகத் தெரியவந்துள்ளது. கொக்கோ உற்பத்தியில் இந்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதனிடையே, சிகாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கொக்கோ பண்ணைகளில் செய்த ஆய்வுகளின்மீது கானாவும் ஐவரி கோஸ்ட்டும் கேள்வி எழுப்பியுள்ளன. தற்போது இரு நாடுகளிலும் உள்ள விவசாயப் பண்ணைகளில் 1.56 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.