அமெரிக்காவில் நடைபெற்று வரும் கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பாப் பாடகி லேடி காகா, பிராண்டி கார்லே ஆகியோர் மூன்று விருதுகளை அள்ளினர்.
உலக அளவில் சிறந்த இசைக்கு கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 60 வருடங்களாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள் தான் இசைக்கு வழங்கப்படும் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. இந்த வருடத்திற்கான விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
84 பிரிவுகளின் கீழ வழங்கப்படும் விருதுகளில் 3 விருதுகளைப் பெற்று அசத்தியுள்ளார் பாப் பாடகி லேடி காகா. Joanne இசை ஆல்பத்துக்காக பெஸ்ட் பால் சோலோ பர்ஃபார்மன்ஸ் மற்றும் ஷாலோவ் ஆல்பத்துக்காக இரு விருதுகளையும் லேடி காகா பெற்றுள்ளார். பெஸ்ட் அமெரிக்கன் ரூட்ஸ் பர்ஃபார்மன்ஸ், பெஸ்ட் அமெரிக்கன் ஆல்பம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் பரண்டி கார்லேவும் மூன்று விருதுகளை அள்ளிச் சென்றார்.
இது தவிர பெஸ்ட் ராப் பிரிவுக்கான விருதை பெற்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்ததுள்ளார். இது அவரது ரசிகர்களை வெகுவாக மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
பிரிட்டன் பாடகரான டுவா லிபா, சிறந்த புதுமுக கலைஞர் பிரிவுக்கான விருதை வென்றுள்ளார். இந்த அறிவிப்பை கேட்டதும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தபடி அவர் மேடையேறி சென்றார். மேலும் முதன்முறையாக பாப் பாடகி அரியானா கிராண்டே, கிராமி விருதை வென்றுள்ளார். ஸ்வீட்நெர் இசை ஆல்பத்தில் பாடியதற்காக இவருக்கு best pop vocal album என்ற பிரிவில் இவ்விருது வழங்கப்பட்டது. விழாவில் அவர் பங்கேற்காததால், கிராண்டேவுக்கு பதிலாக விழா குழுவினரே அந்த விருதை பெற்றுக் கொண்டனர்.
சில்டிஷ் காம்பினோவின் திஸ் இஸ் அமெரிக்கா பாடல், இந்த ஆண்டுக்கான சிறந்த பாடல் பிரிவுக்கான கிராமி விருதை வென்று அசத்தியுள்ளது. துப்பாக்கி வன்முறையால் ஏற்படும் உயிரிழப்புகளை மையப்படுத்தி இந்தப் பாடல் உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம் வெளியடப்பட்டது குறிப்பிடத்தக்கது.