கொரோனா வைரஸை விட நிபா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும், உலகளாவிய நோய் தொற்றாக மாறக்கூடும் எனவும் அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவை விட நிபா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். நிபா வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பு மருந்துகள் இல்லாததால், ஆரம்ப கட்டத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.
நிபா வைரஸின் அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்தில் கண்டறிவது சவால் நிறைந்ததாக இருக்கலாம் எனவும், இதனால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய் பரவலைத் தடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.