பாய்ந்து வந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய பூனை : வீடியோ

பாய்ந்து வந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய பூனை : வீடியோ
பாய்ந்து வந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய பூனை : வீடியோ
Published on

கொலம்பியாவில் பூனை ஒன்று பாய்ந்து வந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகளின் விளையாட்டு வாழ்க்கை மற்றும் உற்சாகம் குறைந்து வருவதாகவே காணப்படுகிறது. மேலும், பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு சென்றால், நிலைமை இன்னும் மோசமாகிறது. இதுபோன்ற ஒரு சூழலில், வீட்டில் செல்ல பிராணி வளர்ப்பது, குழந்தைகளுக்கான மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாகவும், மனதிற்கு மகிழ்வைத் தரும் விஷயமாகவும் இருக்கிறது.

வீட்டில் வளர்க்கப்படும் நாய், போன்ற போன்ற செல்லப் பிராணிகள், மனிதர்களின் அன்பை அதிகம் எதிர்பார்ப்பவை. அதேசமயம், அவை தன்னை வளர்த்து உணவளிப்பவர்களுக்கு காட்டும் பதில் மரியாதையும், அன்பும் கூடுதலாக இருக்கும் என்றே சொல்லலாம். அதிலும், நாய்கள், பூனைகள் போன்றவை தனது எஜமானர்களுக்கு காட்டும் அன்பு அளவிட முடியாதது. சில பிராணிகள் எஜமானர்களை காப்பாற்ற உயிரை பறிகொடுத்த நிகழ்வுகளும் உண்டு. 

அந்த வரிசையில் தற்போது கொலம்பியாவில் பூனைக் குட்டி ஒன்று தனது எஜமானரின் குழந்தை உயிரை காப்பாற்றியிருப்பது அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. தலைநகர் போகோடாவில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை அங்கும் இங்குமாக தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த குழந்தை தவழ்ந்து மாடி படிக்கட்டு அருகே சென்றது. இதைப்பார்த்த நாற்காலியில் அமர்ந்திருந்த பூனைக்குட்டி பாய்ந்து வந்து குழந்தையை தடுத்து நிறுத்தியது. மேலும் படிக்கட்டின் பக்கம் செல்லாதவாறு குழந்தையை பிடித்து தள்ளியது. இதனால் குழந்தைக்கு ஏற்பட இருந்த விபரீதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

இந்த காட்சிகள் அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பூனையின் செயலை பாராட்டி வீட்டின் உரிமையாளர் இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com