டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக ரயிலில் இருந்து பூனை ஒன்று வெளியேற்றப்பட்டதாக பகிரப்பட்டிருக்கும் வீடியோ அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது.
வடக்கு சீனாவில் பூனை ஒன்று ரயில் பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்ட வீடியோ நகைச்சுவையாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. வடக்கு சீனாவின் விரைவு ரயில் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவை தைவானைச் சேர்ந்த லின் மாவோ என்ற பெண் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அத்துடன் டிக்கெட் எடுக்காததால் ரயில்வே காவலர்களால் வெளியேற்றப்படும் பூனையைப் பாருங்கள் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில், விரைவு ரயில் இருக்கைக்கு கீழ் பதுங்கியிருந்த பூனையை ரயில் காவர்களுள் ஒருவர் முன்னங்கால்களை பிடித்து வெளியேகொண்டு செல்கிறார். ரயிலில் இருந்து அந்த பூனையை கீழே இறக்கி, சிறிது தூரத்திற்கு கொண்டு சென்று விட்டுவிடுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் பல்வேறு நகைச்சுவை கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.