அமெரிக்காவில் காரினுள் கிருமிநாசினியையும், சிகிரெட்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்திய ஒருவரின் கார் பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்த வாகன ஓட்டி ஒருவர் புகைப்பிடித்துக்கொண்டே கிருமிநாசினியை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தீ சிறிது நேரத்தில் கார் முழுவதும் பரவி பற்றி எரிந்துள்ளது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் 911 என்ற அவசர எண்ணை அழைத்து விபத்து குறித்து விவரத்தை கொடுத்த நிலையில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். சரியான நேரத்தில் வெளியேற்றப்பட்ட வாகன ஓட்டிக்கு கை உள்ளிட்ட இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
check: Hand sanitiser & lighted cigarette start a fire in an occupied car. The driver was able to escape the vehicle while onlookers called 911. The patient suffered from NLT 1st & 2nd-degree burns on his hands & inner thighs & transported to hospital," wrote Piringer.
இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ காரில் ஏற்பட்ட தீ, ஓட்டுநர் புகைப்பிடித்துக்கொண்டிருந்த போது கிருமிநாசினியை பயன்படுத்தியதால் ஏற்பட்டது. இவை கார் போன்ற காற்றோட்டமில்லாத இடத்தில் பயன்படுத்த கூடாத பொருட்கள்; அனைத்தும் நாசம்” என்று பதிவிட்டுள்ளார்.
தகவல் உதவி - timesnownews