பனாமா கேட் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் குண்டு வீசி கொல்லப்பட்டார்.
பனாமா நாட்டில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றின் உதவியோடு, பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பான ஆவணங்கள் பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது.
இதில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிக்கி, சிக்கலில் மாட்டிக்கொண்டனர்.
இதை வெளிப்படுத்தியவர், மால்டா நாட்டை சேர்ந்த பெண் செய்தியாளர், டப்னே கருவானா கலீஜியா (53). இதைத் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், மால்டாவில் உள்ள மோஸ்டா அருகே காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் கார் மீது குண்டு வீசப்பட்டது. குண்டு வெடித்த வேகத்தில், கார் ரோட்டில் இருந்து பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டது. இதில் அவர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.