வேலூர்: கொரோனாவால் இறந்தவர் உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா..?

வேலூர்: கொரோனாவால் இறந்தவர் உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா..?
வேலூர்: கொரோனாவால் இறந்தவர் உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா..?
Published on

கொரோனா பாதிப்பில் உயிரிழப்பவரின் முகத்தைக்கூட குடும்பத்தினரால் கடைசியாக ஒருமுறை முழுமையாக பார்க்க முடியாத சோகமான நிலையே நிலவுகிறது.

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த 45 வயது நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஏழாம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் அடுத்த நாள் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நபரின் உடலில் எத்தனை காலம் வைரஸ் உயிருடன் இருக்கும், அது மேலும் பரவுமா என்ற கேள்விகளுக்கு இதுவரை உலக அளவில் தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து அடக்கம் செய்யும் முறையே கடைபிடிக்கப்படுகிறது.

அந்த வகையில், வேலூரில் உயிரிழந்த நபரின் அடக்கமும் நடந்தது. அவரது உடல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சாதாரண துணியைக் கொண்டு 3 அடுக்குகள் உடலில் சுற்றப்பட்டது. அடுத்து பிளாஸ்டிக் பையில் வைத்து மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து பிரத்யேக வாகனத்தில் உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் ஐந்து பேர் மூலம் கொண்டு போய் வைக்கப்பட்டது. இவர்கள் 5 பேரும் முழுஉடல் பாதுகாப்பு உடை, கவசங்களை அணிந்து கொண்டிருந்தனர்.

உறவினர்கள் யாரும் அருகில் அனுமதிக்கப்படவில்லை. உடல் அடக்கம் செய்வதற்காக இடுகாட்டில் 12 அடி ஆழம் தோண்டப்பட்ட குழியில் அதிக அளவு கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருந்தது. அதில் உடல் இறக்கப்பட்டு மண் போட்டு மூடப்பட்டது. மண் மூடிய பிறகும் அந்த இடம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதில் உறவினர்கள் யாரும் அருகில் அனுமதிக்கப்படவில்லை. மதச் சடங்குகளும் 20 அடி தள்ளி நின்றபடியே நடந்தது. இறுதியாக அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பு உடைமைகள் அங்கேயே அருகில் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இவர்களுக்கு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர். அங்கு வந்த அனைவரின் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கடைசியாக ஒருமுறை இறந்தவரின் முகத்தை கூட பார்க்கவிடாத துயரத்தை ஏற்படுத்துகிறது கொரோனா. ஆகவே நோய் வரும் முன் காப்போம் எச்சரிக்கையாய் தனித்திருப்போம், விலகி இருப்போம், வீட்டில் இருப்போம் என்பதே துயர் ஏற்படாமல் தவிர்க்க ஒரே வழி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com