பிணைக்கைதிகளை வைத்து மிரட்டும் சீனாவின் ராஜதந்திரம் அம்பலம் - கனடா பிரதமர்

பிணைக்கைதிகளை வைத்து மிரட்டும் சீனாவின் ராஜதந்திரம் அம்பலம் - கனடா பிரதமர்
பிணைக்கைதிகளை வைத்து மிரட்டும் சீனாவின் ராஜதந்திரம் அம்பலம் - கனடா பிரதமர்
Published on

ஹாங்காங்குடன் செய்திருந்த ராணுவ தளவாடப் பொருள்களின் ஏற்றுமதிக்கு கனடா பிரதமர் ட்ரூடோ தடை விதித்துள்ளார்.

இதுகுறித்து கனடா பிரதமர் கூறுகையில், “கனடா ஹாங்காங்கிற்கு முக்கியமான ராணுவ பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்காது. ஹாங்காங்குக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களும் சீனாவுக்கும் சொந்தமானவை எனக் கனடா கருதுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வரும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “கனடா அரசிடமிருந்து ஏதேனும் பெறுவதற்கு, நம் மக்களைக் கைது செய்வது சிறந்த வழியாக இருக்கும் எனச் சீன அரசு முடிவு செய்தால், பின்பு கனடியர்கள் யாரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். நம் நாட்டை கட்டுப்படுத்துவதற்காகப் பிற நாடுகள் கனட மக்களைக் கைது செய்யத் தொடங்குவார்கள். கனட மக்களை கைது செய்தால் எதுவும் நடக்காது என்பதைச் சீனாவுக்கு நிரூபிக்க வேண்டும். எங்கள் நாட்டு நீதி சுதந்திரத்துக்கு எதிரானது, இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பணயக்கைதிகளை வைத்து மிரட்டுவது சீனாவின் ராஜதந்திரத்தை அம்பலப்படுத்துகிறது. ” எனக் குறிப்பிட்டார்.

கனடா அரசின் இந்தத் தடை அந்நாட்டு நீதி சுதந்திரத்துக்கான ஒரு முக்கிய படி எனக் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 2018 ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த ஹூவாய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சூ ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. அப்போது மெங் வாங்சூ கனடாவில் இருந்தார். இதனால் அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று கனடா மெங் வாங்சூவை கைது செய்தது.

இதனால் கனடாவின் குடிமக்களான கோவிர்க், மைக்கேல் ஸ்பாவோர் ஆகிய இருவரும் உளவாளி எனக்கூறி சீனா அவர்களை தடுத்து வைத்தது. இதனைத்தொடர்ந்து கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்னை நிலவி வருகிறது. மெங் வான்சூ, விடுதலை செய்யப்பட்டால் மட்டுமே கனடா நாட்டினர் இருவம் விடுவிக்கப்படுவார்கள் எனச் சீனா மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com