குழந்தைகள் நலனுக்காக கனடா அரசின் அசத்தல் முயற்சி... ‘தமிழக மாடல்’ என கொண்டாடும் நெட்டிசன்கள்!

கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளார் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
காலை உணவுத்திட்டம்`
காலை உணவுத்திட்டம்`புதிய தலைமுறை
Published on

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது x வலைதளப்பக்கத்தில் இன்று காலையில், “கனடா பள்ளி குழந்தைகளுக்கு தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்” என ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், “குழந்தைகள் நன்கு கல்வி பயில, அவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு செல்லவேண்டும். கனடாவின் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் ஒவ்வொரு மாணவரும் அவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இது பெரிதளவில் உதவும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

காலை உணவுத்திட்டம்`
தமிழ்நாட்டை போலவே தெலங்கானாவிலும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்! எப்போது தொடங்குகிறது தெரியுமா?

கனடாவை பொறுத்தவரை 1994 ஆம் ஆண்டு முதல் கனடாவின் பிரேக் ஃபாஸ்ட் கிளப் மூலம் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது. கனடா அரசாங்கமும் நீண்ட காலமாக இத்தகைய திட்டத்தை தொடங்கப்போவதாக உறுதியளித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் இந்த தேசிய உணவு திட்டத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 பில்லியன் டாலர் செலவழிக்க திட்டமிட்டுள்ளது கனடா அரசு. மேலும் இத்திட்டம் மூலம் ஏராளமான குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா மற்றும் நோவா ஸ்கோடியா ஆகிய நாடுகள் பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவுகளுக்கு நிதியை ஒதுக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டேவும் தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அரசுப் பள்ளிகளில் 1- 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தினை கொண்டுவந்தது. இதனைதொடர்ந்து தெலங்கானா போன்ற சில மாநிலங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தகட்டமாக நாடு விட்டு நாடு சென்றுள்ளது தமிழ்நாடு அரசின் திட்டம் எனக்கூறிவருகின்றனர் இணையவாசிகள்.

காலை உணவுத்திட்டம்`
’நெதன்யாகு பதவி விலகணும்’- இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த மக்கள்.. ஏன் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com