கனடாவைச் சேர்ந்த சுற்றுப்புற ஆர்வலர் ஒருவர் பிளாஸ்டிக் பாட்டில்களால் கோட்டையைக் கட்டியுள்ளார்.
பனாமாவில் அமைந்துள்ள போகாஸ் டெல் டோரோ தீவு சிறந்த சுற்றுலாத் தளமாகும். கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் குப்பைகளால் அங்கு சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் கிங் என்று அழைக்கப்படும் ராபர்ட் என்ற கனடாவைச் சேர்ந்த சுற்றுப்புற ஆர்வலர் கடற்கரை ஓரங்களில் வீணாக இருக்கும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்தார். சுமார் 40 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்த அவர் இரும்பு கம்பிகள் துணையுடன் நான்கு அடுக்குகள் கொண்ட கோட்டையை எழுப்பியுள்ளார். இதன்மூலம் உலகிலேயே குறைந்த செலவில் கட்டப்பட்ட பிரமாண்ட பிளாஸ்டிக் கோட்டை என்ற சிறப்பை பெற்றது. பனாமா அரசால் வழங்கப்படும் சுற்றுச்சூழலுக்கான சிறப்பு விருதை ராபர்ட் வென்றுள்ளார்.