புரட்சியாளர் சேகுவேராவின் மகன் கமிலோ குவேரா மாரடைப்பால் மரணம்

புரட்சியாளர் சேகுவேராவின் மகன் கமிலோ குவேரா மாரடைப்பால் மரணம்
புரட்சியாளர் சேகுவேராவின் மகன் கமிலோ குவேரா மாரடைப்பால் மரணம்
Published on

கியூபாவின் புரட்சியாளர் சேகுவேராவின் மகன் கமிலோ சேகுவேரா வெனிசூலாவில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 60.

உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும்⸴ தியாகத்திற்கும் உதாரணமாகத் திகழ்கின்றவர் சேகுவேரா. புரட்சியாளர்⸴ மருத்துவர்⸴ அரசியல்வாதி⸴ இலக்கியவாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட போராளியாவார். இவருக்கு இரண்டு மகன்கள். இவரில் இளையவர் கமிலோ சேகுவேரா வெனிசுலாவின் கராகஸ் நகருக்குச் சென்றபோது, நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ப்ரென்சா லத்தினா தெரிவித்துள்ளது.

சேகுவேரா இறந்தவுடன் ஹவானாவில் உள்ள சே குவேரா ஆய்வு மையத்தின் இயக்குநராக இவர் இருந்தார். அதில் சேகுவேராவின் கிளர்ச்சி தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிற பொருட்கள் உள்ளன.

கமிலோ குவேரா பொதுவாக விளம்பரத்தை விரும்பாதவர். இருப்பினும் அவர் சில சமயங்களில் தனது தந்தையை கௌரவிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். சந்தைப்படுத்தல் போன்ற நிகழ்வுகளில் சே குவேராவின் படத்தைப் பயன்படுத்துவதைப் பகிரங்கமாக எதிர்த்தார்.

கமிலோவின் மறைவுக்கு கியூபா அதிபர் தனது ட்விட்டர் பதிவில் "ஆழ்ந்த வலியுடன், சேவின் மகனும் அவரது யோசனைகளை ஊக்குவிப்பவருமான கமிலோவிடம் நாங்கள் விடைபெறுகிறோம்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com