பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்திய தேசிய மூவர்ண தேசிய கொடியின் நிறத்தில் ஜொலித்தது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பாலஸ்தீனம் செல்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் பாலஸ்தீனத்துக்கு செல்வது இதுவே முதல்முறை என்பதால் இந்தச் சுற்றுப்பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதிபர் முகமது அப்பாஸை சந்திக்கும் பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது.
முன்னதாக வழியில் ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மன்னர் இரண்டாம் அப்துல்லாவை மோடி சந்தித்துப் பேசினார்.
இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு செல்கிறார். இன்றும் நாளையும் அவர் அங்கு சுற்றுப்பயணம் செய்கிறார். துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசர் ஜயித் அல் நயான் ஆகியோரை சந்தித்துப் பேச இருக்கிறார்.
இதையடுத்து பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள வானுயர கட்டிடங்கள், இந்திய தேசிய கொடியின் முவர்ண நிறத்தில் ஜொலிக்கிறது. துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா, அபுதாபி ஆயில் நிறுவன கட்டிடம், துபாய் ஃபிரேம் ஆகிய பிரமாண்ட கட்டிடங்களும் மூவர்ணக் கொடியின் வர்ணத்தில் மின்னியது.