சீனாவின் சர்வதேச பனித் திருவிழாவில் பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
சீனாவின் ஹர்பின் நகரில் கடந்த 5ஆம் தேதி சர்வதேச பனித் திருவிழா தொடங்கியது.திருவிழாவை முன்னிட்டு பனிச்சிற்பம் வடிவமைக்கும் போட்டி, பனிச் சறுக்குப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவைக்காண பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பயணிகள் சீனாவில் குவிந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக பிரமாண்ட திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சீனாவைச் சேர்ந்த 34 ஜோடிகள், கொட்டும் பனிப்பொழிவில் திருமணம் செய்துகொண்டனர். பனித் திருவிழாவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில் மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மணமக்கள் அனைவரும் பனிச்சிற்பங்கள் மத்தியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த விழாவில் திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி கூறுகையில், நாங்கள் இருவரும் கடந்த ஆண்டு ஒரு காபி ஷாப்பில் தற்காலிகமாக சந்தித்துக் கொண்டோம். கடந்த ஆண்டு எங்கள் வாழ்வில் பல்வேறு ஏற்ற தாழ்வுகள் இருந்தது. பனி தூய்மையானது. எங்கள் காதலை போன்று. இது எங்கள் வாழ்வில் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தும் என்றனர். ஒருவருக்கொருவர் சந்தோஷமாகவும் எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருப்போம் என அந்த ஜோடியினர் தெரிவித்தனர்.