எல்லை தாண்டியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பசு, சர்வதேச சமூகத்தின் ஆதரவால் தண்டனையில் இருந்து தப்பியுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் ஒன்றான பல்கேரியாவை சேர்ந்த பென்கா என்ற பசு, கடந்த மாதம் செர்பியாவிற்குள் நுழைந்தது. இரண்டு வாரங்கள் கழித்து அந்த பசு மீண்டும் பல்கேரியாவுக்கு வந்தது. மீண்டும் நாட்டுக்குள் நுழைந்ததால் அந்த பசுவுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என பல்கேரிய அதிகாரிகள் அறிவித்தனர். சர்வதேச அளவிலும், விலங்குகள் நல ஆர்வலர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பசுவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது என வெளிநாடுகளில் இருந்து, பல்கேரிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கோரிக்கையை ஏற்ற பல்கேரிய அரசு , பசுவை பரிசோதித்து அதற்கு உடல்நிலை சீராக உள்ளதை உறுதி செய்து மரண தண்டனையை ரத்து செய்தது.