“கீமோதெரபி முடிந்துவிட்டது” - நிம்மதி பெருமூச்சுடன் பிரிட்டன் இளவரசி கேட் வெளியிட்ட வீடியோ!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் இளவரசி கேட் (கேத்தரின்), கீமோதெரபி சிகிச்சையை முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
Catherine, Princess of Wales
Catherine, Princess of WalesTwitter
Published on

இளவரசர் வில்லியமின் மனைவியான 42 வயதான கேட்டிற்கு, கடந்த ஜனவரி மாதம் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தபோது, அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதுகுறித்த எந்த விவரங்களும் வெளியிடப்படாமல் இருந்து வரும் நிலையில், அதற்கான சிகிச்சைகளை மட்டும் கேட் தொடர்ந்து பெற்றுவருகிறார்.

இந்நிலையில், புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையை முடித்துவிட்டதாக கேட் தற்போது தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி கீமோதெரபி முடிந்திருந்தாலும் புற்றுநோயில் இருந்து முழுவதுமாக குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ள அவர், இந்த ஆண்டு சில பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Catherine, Princess of Wales
இந்தியாவில் உறுதிசெய்யப்பட்டது முதல் ‘குரங்கம்மை’ தொற்று... அதென்ன க்ளேட் 1 & 2?

இதைத்தொடர்ந்து, கென்சிங்டன் மாளிகையின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்ட கேட் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கேட் நேரம் செலவழிப்பது போன்ற அந்த வீடியோவை பார்த்து, கேட் விரைவில் குணமடைய சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com