“என் நண்பனை சுட்டுக்கொன்னுட்டீங்களா?” - ரஷ்ய ராணுவத்தை பழிவாங்க 300 கி.மீ. நடந்துசென்ற உயிர் நண்பர்!

உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றிய நெருங்கிய நண்பர் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டதை அடுத்து, அதற்குப் பழிவாங்கும் நோக்கில் பிரிட்டிஷ்காரர் ஒருவர், உக்ரைனுக்கு 300 கிலோ மீட்டர் நடந்துசென்றிருப்பது இணையச் செய்திகளில் வைரலாகி வருகிறது.
மார்கஸ் ஸ்மித்
மார்கஸ் ஸ்மித்x
Published on

மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் மார்கஸ் ஸ்மித் (32). இவர், ஸ்பெயின் நாட்டில் தங்கியிருந்து அந்த நாட்டு மொழியைக் கற்று வந்திருக்கிறார். இந்த நிலையில், உக்ரைன் ராணுவப் படையில் சிப்பாயாகப் பணியாற்றி வந்த அவரது நெருங்கிய நண்பர் ஒருவர், ரஷ்யாவுக்கு எதிரான போரில் ட்ரோன் தாக்குதலில் இறந்துபோனார் என தகவல் கிடைத்துள்ளது. இதில் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் தன்னைத் தேற்றிக்கொண்டு தன் நண்பரை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக உக்ரைன் படையில் சேருவதற்காகப் பயணப்பட்டிருக்கிறார். இதற்காக, அவர் 300 கி.மீட்டர் தூரத்தை நடந்தே சென்றிருப்பதுதான் பேசுபொருளாகி வருகிறது.

இதற்காக தாம் வைத்திருந்த நீண்ட சுருள் முடியை வெட்டியுள்ளார். பின்னர், பார்சிலோனாவில் இருந்து புடாபெஸ்ட்டுக்கு விமானத்தில் புறப்பட்டுள்ளார். ஆனால் அவரிடம் இருந்த பணம் மொத்தம் செலவானதை அடுத்து, 8 நாட்கள், 300 கிலோ மீட்டர் தூரம் கொண்ட உக்ரைன் எல்லைக்கு நடந்தே சென்றுள்ளார். பின்னர், உக்ரைன் எல்லைப்படை வீரர்களின் உதவியுடன் உக்ரைனுக்குள் சென்றுள்ளார். தற்போது மேற்கு உக்ரைனில் உள்ள உஸ்ஹோரோட் என்ற நகரத்தில் இருக்கும் அவர், அங்கு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் விரைவில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக போர் புரிவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: உலகில் அதிக முறை கைதான போதை ஆசாமி.. 6,000 நாட்கள் சிறைவாசம்.. அமெரிக்க நபருக்கு நேர்ந்த சோகம்!

மார்கஸ் ஸ்மித்
உக்ரைனுக்கு ஆதரவாக நிதி திரட்டிய பெண்: கைதுசெய்து கண்ணைக் கட்டி அழைத்துச் சென்ற ரஷ்யா.. வைரல் வீடியோ

இதுகுறித்து அவர், ”உக்ரைனில் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். நானும் அவரும் வீடியோ கேம்ஸ் விளையாடுவோம், ஆன்லைனில் அதிகம் பேசுவோம். அவன் தன் குடும்பத்தைப் பற்றி என்னிடம் கூறுவது வழக்கம். அவரது தாயார் எனக்கு போன் செய்து ட்ரோன் தாக்குதல் பற்றி கூறினார், அது என்னை மிகவும் காயப்படுத்தியது. என்னிடம் உள்ள திறமைகள் இந்தப் போரில் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நான் காலவரையின்றி உக்ரைனில் ராணுவத்தில் பணியாற்ற விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மார்கஸ் ஸ்மித், தன்னுடைய 17வது வயதில் இங்கிலாந்தின் உறைவிடப் பள்ளியில் தங்கிப் படித்தபோது ராணுவத்தின் சில பயிற்சிகளைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அது, தற்போது பயன்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், பிரிட்டிஷார் உக்ரைனுக்கு புறப்பட்டுச் சென்று, உரிய அனுமதி இல்லாமல் போரில் கலந்துகொண்டு நாடு திரும்பினால், அவர்கள் தண்டிக்கப்படுவார் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உ.பி.| 7 வயதில் கடத்தப்பட்ட சிறுவன்.. தாயை பிரிந்து திசைமாறிய வாழ்க்கை; 22 வருட பாசப்போராட்டம்!

மார்கஸ் ஸ்மித்
கட்டாய ராணுவப் பணி.. சர்ச்சைக்குரிய மசோதாவில் கையெழுத்திட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com