பிரிட்டிஷ் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் யூடியூப் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்ட நிலையில், அவை மீட்கப்பட்டன.
பிரிட்டிஷ் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மற்றும் யூடியூப் சேனல் ஆகியவை நேற்று மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டன. 3,62,000 பேர் பின்தொடரும் இந்த ட்விட்டர் பக்கமும் 1,77,000 சப்ஸ்கிரைபரஸ் கொண்ட இந்த யூடியூப் சேனலும் முடக்கப்பட்ட பின், அதில் கிரிப்டோகரன்சி மற்றும் என்.எப்.டி. போன்ற பொருத்தமற்ற பதிவுகள் பதிவிடப்பட்டதோடு, முகப்பு படங்களும் மாற்றப்பட்டன. மேலும் ஹேக் செய்தவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்தின் யூடியூப் சேனல் பெயரை 'Ark Invest' என மாற்றினர்.
இதைத்தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் ஹேக் செய்யப்பட்ட சமூக வலைத்தள பக்கங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சிலமணி நேரங்களிலேயே பிரிட்டிஷ் ராணுவத்தின் ட்விட்டர் மற்றும் யூடியூப் கணக்குகள் மீண்டும் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பின், ஹேக்கர்களால் போஸ்ட் செய்யப்பட்ட ட்வீட்டுகள் உடனடியாக நீக்கப்பட்டன எனவும் இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பு கோருவதாகவும் பிரிட்டிஷ் இராணுவம் கூறியுள்ளது.
இதையும் படிக்கலாம்: வெனிஸ் நகருக்கு போறீங்களா? இனி 'எண்ட்ரன்ஸ் ஃபீஸ்' கட்டாயம்