உக்ரைன் மீது உக்கிரமாக போரிட்டு வரும் ரஷ்யாவை பொருளாதார ரீதியாக பின்னடவை சந்திக்க செய்யும் நோக்கில் பல்வேறு தடைகளை உலக நாடுகள் விதித்து வருகின்றன. இந்நிலையில் ‘வோட்கா’ உட்பட ரஷ்ய பொருட்களுக்கு இறக்குமதி கட்டணத்தை உயர்த்தி உள்ளது பிரிட்டன் அரசு. மேலும் தங்கள் நாட்டிலிருந்து விலை உயர்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்யவும் தடை விதித்துள்ளது பிரிட்டன்.
“ரஷ்யாவின் பொருளாதாரத்தை தாக்கும் நோக்கில் அந்த நாட்டுடனான வணிகத்தை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம். வோட்கா, மரம், தானியங்கள், பானங்கள், Fur, Steel மற்றும் வெள்ளை மீன் ஆகியவற்றுக்கான இறக்குமதி கட்டணத்தில் மேலும் 35% அதிகரித்துள்ளோம்.
அதே போல நாங்கள் விரைவில் கொண்டு வர உள்ள ஏற்றுமதி தடை புதின் அரசுக்கு உதவி வரும் மேட்டுக்குடி மக்களுக்கு சங்கடங்களை கொடுக்கும்” என அந்த நாட்டின் சர்வதேச வணிக துறை தெரிவித்துள்ளது.